அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் சிறப்பு
ஹழ்ரத் அபூபக்கர்
சித்திக் (ரலி) அவர்கள்
மக்காவிலுல்ல பிரபலமான குரைஷி
வம்சத்தின் ஒரு பெரிய
குடும்பத்தில் பிறந்தவர்கள் .இவர்களின்
பெயர் அப்துல்லாஹ்,தந்தை
பெயர் உஸ்மான்,தாயார்
பெயர் ஸல்மா என்பதாகும்.
இவர்கள் சிறு
வயதிலிருந்தே நல்லொழுக்கமுடையவராகத்
திகழ்ந்தார்கள்.இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னமே ஒரு போதும் மது அருந்தியது கிடையாது,சிலைகளை வனங்கியதும் கிடையாது.இவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை
விட இரண்டரை ஆண்டு
இளையவர்.இருவருமே சிறு
வயது முதல் நண்பர்கள்.இவர்கள்
நபி (ஸல்) அவர்களின்
குணநலன்களையும் பளக்க வளக்கங்களையும்
மிக அருகிலிருந்து பார்தவர்கள்.மேலும்
நபி (ஸல்) அவர்கள் உன்மையாளரே,ஒரு
போதும் பொய் பேச
மாட்டார்கள் என உருதியாக
நம்பினார்கள்.
ஆகையால் நபித்துவம்
கிடைத்த பிறகு நபி
(ஸல்) அவர்கள் இவர்களுக்கு
அழய்ப்பு விடுத்தபோது அதை
உடனே ஏற்றார்கள்.மேலும்
இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில்
முதல் இடத்தை பெற்றார்கள்.வாழ்நாள் முழுவதும் நபி (ஸல்) அவர்களுக்கு உடல்,பொருள்,உயிர் அனையத்தயும் அர்பனம் செய்தார்கள்.
ஹழ்ரத்
அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதுமே மனதாலும் உயிராலும் நபி (ஸல்) அவர்களுக்கு துணை புரிந்தார்கள்.மேலும் இஸ்லாமிய பிரச்சாரதில் ஈடுபட்டார்கள்.மக்காவின் 13 ஆண்டுகால வாழ்கையில் நபி
(ஸல்) அவர்களோடு எல்லா வகையான துன்பத்திலும் இனைந்திருந்தார்கள்.மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது இவர்கள் தான் அவர்களுடன் இருந்தார்கள்.
ஹிஜ்ரத்தின்
போது ஸவ்ர் குகைக்குள்
மூன்று நாட்கள் வரை
நபி (ஸல்) அவர்களுடன்
தங்கினார்கள்.பிறகு இருவரும்
இரண்டு ஒட்ட்கங்களில் பயனித்து
மதீனா சென்றடைந்தார்கள்.மேலும்
மதீனாவில் வாழ்ந்த போது
இஸ்லாத்திற்கு எதிராக ஏற்பட்ட
அனைத்து யுத்தங்களிலும் நபி
(ஸல்) அவர்களுடன் இணைந்து
துணிச்சலாக போர்
புரிந்தர்கள்
நபிகள்
நயகம் (ஸல்) அவர்களின்
மரனத்திற்குப்பின் ஹழ்ரத் அபூபக்கர்
சித்திக் (ரலி) அவர்கள்
ஹலீஃபாவாக பொறுப்பேற்கிறார்கள்.இவர்களின்
ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு
நாலாபுறமும் எதிர்ப்பு வலுத்தது,பகைவர்கள்
தலை தூக்க ஆரம்பித்தனர்.சில
பொய்யர்கள் தன்னை நபி
என பிரகடனப்படுத்தினர்.அனேக
மக்கள் அந்தப் பொய்யர்களுடன்
இணைந்தனர்.இஸ்லாத்தை சரியாகப்
புரிந்து கொள்ளாத சில
புதிய முஸ்லிம்கள் ஜகாத்
கொடுக்க மறுத்தனர்.
இதே போன்று
வெளிப்படையில் முஸ்லிமாகவும்,அந்தரங்கத்தில்
நயவஞ்சகர்ளாகவும் இருந்த முனாஃபிக்குகள்
இஸ்லாத்திற்கு எதிராக சூள்ச்சிகள்
செய்யலாகினர்.கிறிஸ்துவ அரசன்
ஹிர்கல் என்பவன் முஸ்லிம்களை
கூண்டோடு அழிக்க திட்டம்
தீட்டினான்.இவ்வாறு நாலாபுறமும்
பகை நெருப்பு மூண்டெழ
அவை அனைத்தையும் துணிச்சலாகவும்
சாயதுர்யமாகவும் செயல்பட்டு வென்றார்கள். ஒவ்வொரு
பகுதிக்கும் இஸ்லாமிய படையை
அனுப்பினார்கள்.அனைத்து இடங்களிலும்
இஸ்லாமியர்களுக்கு வெற்றி கிடைத்தது
எதிரிகள் மண்ணை கவ்வினர்.
இவ்வாறாக முஸ்லிம்கள்
அனைத்து வகையான அபாயங்களிலிருந்து
பாதுகாப்படைந்தார்கள். இஸ்லாத்தின் புகழ்
பரவியது.
ஹிஜ்ரி 13 ஆம்
ஆண்டு ஜமாதுல் ஆகிர் 7 ஆம்
தேதி ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள்
நோயுற்றார்கள்,மக்கள் இதனை
சாதாரண காய்ச்சல் என்று
ஆரம்பத்தில் நினைத்தர்கள்.ஆனால்
நாளுக்கு நாள் நோய்
தீவிரமடைந்து மிகவும் பலவீனமானார்கள்,வாழ்கையின்
நம்பிக்கையை இழ்ந்தார்கள்.
ஹழ்ரத்
அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது
மகள் ஆயிஷா சித்தீகா (ரலி) அவர்களை
அழைத்து இன்று என்ன
கிழமை எனக் கேட்டார்கள்.அதற்கு
திங்கள் கிழமை என
பதிலளித்தார்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள்
எந்த கிழமையில் மரனமானார்கள்
என மறு கேள்வி
கேட்டார்கள்,அதற்கும் திங்கள்
கிழமை என பதில்
கூறினார்கள்.
இதைக்
கேட்ட அவர்கள் அப்படியானால்
அல்லாஹ் இன்று என்னை
தன்னிடம் அழைத்துக் கொள்வான்
என நம்புகிறேன் என்றார்கள்.அவர்கள்
கருதியபடியே நடந்தது,ஆம்
அன்றைய மாலை நேரம்
அன்னாரின் உயிர் பிரிந்தது.அன்னாரின்
வயது 63,ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள்
ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.பிறகு
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்
அடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஹழ்ரத்
அபூபக்கர் (ரலி) அவர்கள் 2 ஆண்டுகள்,3 மாதங்கள்,11 நாட்கள்
ஹலீஃபாவாக பொறுப்பு வகித்துள்ளார்கள்.தனது
உயிர் பிரிவதற்கு முன்பே
தனக்குப் பிறகு ஹலீஃபாவாக
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களை
நியமித்தார்கள். அவர்களும் தனது
கடமையை செவ்வெனச் செய்தார்கள்.
இப்படிக்கு,
அர்ஷத் ஹாஜா.
No comments:
Post a Comment
கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!