Monday 24 December 2012

இணையத்திலும் டயறி எழுதலாம்….....,


                                                            நம்மில் நிறையப் பேர் டயறி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அன்றாட வாழ்வில் நடக்கின்ற மறக்க முடியாத நிகழ்வுகள், இன்ப துன்பங்கள், எதிர்காலத்திட்டங்கள் போன்றவற்றை நாம் இதில் குறித்து வைத்திருப்போம். பிற்காலத்தில் இவற்றை மீட்டிப் பார்ப்பதற்கு டயறி உதவியாக இருக்கும். இந்தப் பதிவு இணையத்தில் டயறி எழுதுவது சம்மந்தமானது.
டயறி எழுதி சேமிப்பதற்கு பல இணையத்தளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இப்பொழுது நாம் பார்க்கப் போவது www.my-diary.org/ என்பதாகும். இதன் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு இதில் கணக்கு ஒன்றை திறந்து கொள்ள வேண்டும்.
இதில் மேல் பக்கத்தில் காணப்படுகின்ற Write என்பதனைக் க்ளிக் செய்து நம்முடைய குறிப்புக்களை எழுதலாம். அவற்றைச் சேமிப்பதற்கு Save entry   என்பதனைக் க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம்.
Look Up என்ற பகுதியைக் க்ளிக் செய்வதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்த குறிப்புக்களை பார்வையிடலாம். தேவையேற்பட்டால் மாற்றங்களும் செய்யலாம்.
நம்முடைய பக்கத்தின் நிறத்தை மாற்றுவதற்கும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.
Account என்ற பகுதியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உங்களுடைய டயறியை பார்க்கும் வகையில் வைப்பதற்கு அல்லது இரகசியமாக வைத்திருப்பதற்கு வசதிகள் காணப்படுகின்றது.
இதில் நமக்குரிய டயறியை உருவாக்குவது எப்படி எனப் பார்ப்போம்.......,
இந்த இணையத்தளத்திற்கு சென்று அதன் மேற்பக்கத்தில் காணப்படுகின்ற Create Your Own Diary என்பதனை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Create my diary என்பதனை க்ளிக் செய்தவுடன்  verification mail அந்த முகவரிக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலைத் திறந்து அதில் காணப்படும் இணைப்பைக் க்ளிக் செய்து வரும் பக்கத்தில் Diary Name. User Name. Password எனபவற்றைக் கொடுத்து Click Here to start using your diary என்பதனைக் க்ளிக் செய்து பின்னர் வரும் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றைக் கொடுத்து நமக்குரிய பகுதிக்கு உள் நுழைய வேண்டும். பின்னர்தேவையானவற்றை எழுதி சேமியுங்கள்......
இந்தப் பதிவு உங்கள் அனைவருக்கும் பிரயோசனமாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்.

Sunday 23 December 2012

முஹம்மது நபி (570-632)

                                                  இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமான இன்றும் விளங்ககிறது. 
Islamic prophet Muhammad
இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மை யானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேந்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தாதார்கள். ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேந்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்க காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருநத் தென் அரேபிய நாட்டிலுள்ள மக்காள என்னும் பேரூதில் கி.பி. 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள் ஆறு வயதிலேயே அநாகையாகிவிட்ட அவர்கள், எளிய சூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது- தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்‘ர்கள். அதிலிருந்து அவர்களின் பொருள"தார நிலை சீரடைந்தது. 

எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்þ பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப்பற்றி முஹம்மது முதலில் அறிய லானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும் , சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள். 

இதன் பின் , மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613 ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.
பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானார்கள். கி.பி. 622 ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவவிலுள்ள மதீனா (* முஹம்வது நபியவர்கள் அந்த நகருக்குப் பேனபோது அதன் பெயர் "யத்ரிப்" என்பதாகும்; தம் நகருக்கு அவர்கள் குடியேறியதைச் சிறப்பிப்பதற்காக மக்கள் ம் ஊரையே மதினத்துந் நபி "நபியின் பட்டணம்" என்று மாற்றிக் கொண்டார்கள். அன்றிலிருந்து அது "மதீனா" என்றே பெயர் பெற்றுக் கொண்டது.)நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று. 

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்நிகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திறப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர்; ஆனால் மதீனாவிலோ மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள்; இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகை வேகாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630 ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், ,ப்போர் ஓய்ற்தது. அரபுக் கேந்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன. 

அவர்கள் 632 ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுதூதப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரக பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்த்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ் தீனம், முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642 ஆம் ஆண்டில் பைஸாந்தியப் பேரரசிடமிருநது எகிப்தைக் ககைப்பற்றினர். 637 இல் காதிஸிய்யாவிலும், 642 இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன. 

முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுமான அபூபக்ர், உமறுப்னுல் கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711-க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன. 

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்றுகூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால் 732 ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிட்ட ஒரு முஸ்லிம் படை பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர் களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத - இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்ற வையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும்கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்பு களுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கி மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசிய"விலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட, வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். 

இந்தோனேஷியாவில், இப்புது மார்க்மே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும்கூட முஹம்மது நபியவர் களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று; கிறிஸ்துவ வளர்க்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகிய வற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான். (St. PAUL) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் ( THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர் ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன; அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அலை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர் ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்த்துவர்களுக்கு பைபிளைப் போனற், முஸ்லிம்களுக்கு குர் ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர் ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலுமூ ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது; மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் கலைவராக இருந்தார்கள். உண்மையில்6 அரவுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்ரலாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க, முடியாமல் நிகழக் கூடியவை தாம்; அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் (* ஸைமன் பொலீவர் (SIMON BOLIVAR) 1783-1830 வெலிஸீமலா, பெரு ஆகிய நாடுகளின் தலைவராக இருந்த இவர், விடுதலை வீரராகவும் தென் அமெரிக்காவின் வாஷிங்டன் எனவும் கருதப்படுபவர்.) 
பிறந்திருக்காவிட்டாலும்கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும்.. அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை; எனவே அன்னார் இல்லாமலே இத்தக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்காபன் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால் இவ்வெற்றி2கள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத் திருக்கவில்லை. இன்று மஙகோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான். 

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெகரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொணடுள்ள நம்பிக்கையால் ம்ட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிவிலருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர் ஆன இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதுமூ, அது அதரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின் மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக் கொன்று விளங்கா வட்டார மொழிகளாக்ச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும் பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு. இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. நான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானுடம், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில இன்னும்முக்கியமாக பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத் தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது.