குருதி உடுத்தி வலம் வருகிறாள் விடுதலை!
வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்
முகம் உயர்த்தி வெற்றிச் சுடரொளியில்
தமிழீழ முகம் மலர்த்தி
-(குருதி உடுத்தி)
கொத்திச்செல்வேன் எனக் கொக்கரிக்கும்
ராஜபட்சி நீள் சிறகு துணிக்க நெடுவானில்
வாள் உயர்த்தும் தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,
காலவெளியில் ரத்தகானம்பாட!........
-(குருதி உடுத்தி)
துயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்ட
உயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும் ஒரு தாயாய்
-(குருதி உடுத்தி)
விரல் துடைக்கும் நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,
விழிபொசுக்கும் உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை
நுரைசிவக்கும் கடல் அலையே! மறுகரைக்குச் சொல்க
நொறுங்காது தமிழீழம் புலிப்படைதான் வெல்லும்! .......
-(குருதி உடுத்தி)
No comments:
Post a Comment
கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!