நம்மில் நிறையப் பேர் டயறி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அன்றாட வாழ்வில் நடக்கின்ற மறக்க முடியாத நிகழ்வுகள், இன்ப துன்பங்கள், எதிர்காலத்திட்டங்கள் போன்றவற்றை நாம் இதில் குறித்து வைத்திருப்போம். பிற்காலத்தில் இவற்றை மீட்டிப் பார்ப்பதற்கு டயறி உதவியாக இருக்கும். இந்தப் பதிவு இணையத்தில் டயறி எழுதுவது சம்மந்தமானது.
டயறி எழுதி சேமிப்பதற்கு பல இணையத்தளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இப்பொழுது நாம் பார்க்கப் போவது www.my-diary.org/ என்பதாகும். இதன் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு இதில் கணக்கு ஒன்றை திறந்து கொள்ள வேண்டும்.
இதில் மேல் பக்கத்தில் காணப்படுகின்ற Write என்பதனைக் க்ளிக் செய்து நம்முடைய குறிப்புக்களை எழுதலாம். அவற்றைச் சேமிப்பதற்கு Save entry என்பதனைக் க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம்.
Look Up என்ற பகுதியைக் க்ளிக் செய்வதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்த குறிப்புக்களை பார்வையிடலாம். தேவையேற்பட்டால் மாற்றங்களும் செய்யலாம்.
நம்முடைய பக்கத்தின் நிறத்தை மாற்றுவதற்கும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.

Account என்ற பகுதியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உங்களுடைய டயறியை பார்க்கும் வகையில் வைப்பதற்கு அல்லது இரகசியமாக வைத்திருப்பதற்கு வசதிகள் காணப்படுகின்றது.
இதில் நமக்குரிய டயறியை உருவாக்குவது எப்படி எனப் பார்ப்போம்.......,
இந்த இணையத்தளத்திற்கு சென்று அதன் மேற்பக்கத்தில் காணப்படுகின்ற Create Your Own Diary என்பதனை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Create my diary என்பதனை க்ளிக் செய்தவுடன் verification mail அந்த முகவரிக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலைத் திறந்து அதில் காணப்படும் இணைப்பைக் க்ளிக் செய்து வரும் பக்கத்தில் Diary Name. User Name. Password எனபவற்றைக் கொடுத்து Click Here to start using your diary என்பதனைக் க்ளிக் செய்து பின்னர் வரும் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றைக் கொடுத்து நமக்குரிய பகுதிக்கு உள் நுழைய வேண்டும். பின்னர்தேவையானவற்றை எழுதி சேமியுங்கள்......
இந்தப் பதிவு உங்கள் அனைவருக்கும் பிரயோசனமாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்.