Thursday, 26 July 2012

கீதங்கள்

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...


 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 அல்லாஹ்வை நாம் தொழுதால்... 


 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்


 அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்



                                            இந்த மாதம் ஒரு புனிதமான மாதம் ஏனென்றால் இந்த மாதத்தில்தான் நீங்கள் கேட்கும் துஆ அனைத்தும் உடனே கபுல் ஆகிவிடுகின்றன ஆகையால் உங்க்களால் எவ்வளவு தொழ முடியிமோ அவ்வளவு அளவு தொழுங்கள் தொழுவிட்டு அல்லாஹ் விடம் கேளுங்கள் அல்லாஹ் நம் அனைவறுக்கும் நற்கூலியை வழங்குவானாக..!ஆமீன்,ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Saturday, 7 July 2012

இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!

                                                                இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!



சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’ நூல் : திர்மிதி

நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.

இதனால்தான் நாவைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் மிக மிக விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொற்கள்தாம் இதயங்களை இணைக்கின்றன. சொற்கள்தாம் இதயங்களைப் பிளக்கின்றன. சொற் கள்தாம் மனங்களை உடைக்கின்றன. சொற்கள்தாம் நெஞ்சங்களை நெகிழச் செய்கின்றன.

மனிதர்களை ஒன்றுசேர்ப்பதும் சொற்கள்தாம். ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போகச் செய்வதும் சொற்கள்தாம். அழ வைப்பதும் சொற்களே. சிரிக்க வைப்பதும் சொற்களே. சிந்திக்கத் தூண்டுவதும் சொற்களே. உணர்வுகளைக் கிளறச் செய்து மனிதர்களை உசுப்பி விடும் வேகமும் சொற்களுக்கு உண்டு. கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை இதமாக அமைதிப்படுத்துகின்ற ஆற்றலும் சொற்களுக்கு உண்டு.

சில சமயம் மனிதனின் எழுதுகோலே அவனுடைய நாவாக ஆகிவிடுகின்றது. “”போர்பான் மன்னர்கள் பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்களேயானால் போர்பான் அரசுக்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது” என நெப்போலியன் கூறினார்.

நாவால் சொல்லப்பட்டாலும் சரி, எழுதுகோல் மூலமாகத் தாளில் வெளிப்படுத்தப்பட்டாலும் சரி, சொற்களுக்கு இருக்கின்ற வலிமையையும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது. தவறான சொற்கள் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விடப் பெரும் குற்றம் வேறு உண்டா? அந்த ஆற்றலைக் கொண்டு சமுதாயத்தில் சீர்திருத்தத்தையும் நன்மையையும் தழைத்தோங்கச் செய்வதற்குப் பதிலாக குழப்பத்தையும் கலகத்தையும் உண்டு பண்ணுவதை விடப் பெரிய கொடுமை வேறு உண்டா?

நம்முடைய ஆளுமையை எதிரொளிப்பது நாம் மொழிகின்ற சொற்களே. தற்செயலாக, நம்மையும் அறியாமல் ஒரு சொல்லைத் தப்பித்தவறிச் சொல்லி விட்டாலும் அது நம்முடைய உள்மனத்தின் அடிக்குரலாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்.

நாம் மொழிகின்ற சொற்கள் நம்மை சுவனத்தின் உயர் நிலைகளில் உயர்த்திக் கொண்டிருக்கும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும். அதே போன்று நாம் சொன்ன ஒரு தவறான சொல், அல்லது தீய சொல் நம்மை மிகப் பெரும் பின்னடைவுக்குள்ளாக்கி விடும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும் என நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

சில சமயம் நாம் சாதாரணமாக, எந்த இழப்பையும் ஏற்படுத்தாது என்று நினைத்துப் பேசி விடுகின்ற ஒரு சொல் நம்மை மோசமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் நபிமொழிகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாவைப் பயன் படுத்துவதில் நாம் எந்த அளவுக்கு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

Friday, 6 July 2012

சுவர்க்க வாசிகள்!!


                                                                                            சுவர்க்க வாசிகள்!!

உணவு:
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

பானம்:
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

ஆடை:
அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

தோற்றம்:
அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

படுக்கை:
(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

வரவேற்பு:
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

தங்குமிடம்:
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

முன்னேற்பாடு:
அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நிரந்தரம்:
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.

மறந்துவிட்டு மன்னிக்கும் தன்மை!

                                                    மறந்துவிட்டு மன்னிக்கும் தன்மை!


“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55)

மறப்போம் மன்னிப்போம்
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – “மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

அல்லாஹ் கூறுகிறான்: -
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்“. (அல்குர்ஆன் 3:134)

Saturday, 30 June 2012

பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி அல்ல


           பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி அல்ல
                                          
                   ராஜபுத்திர மன்னன் ரான ராஜா சிங்கின் அழைப்பை ஏற்று ஜஹீருத்தின் முஹம்மது பாபர் 1526 இல் பானிபட் எனும் இடத்தை நோக்கி படையெடுத்தார்.அவர் இப்றஹிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரை தோற்கடித்து மொகலாய ஆட்சிக்கு வித்திட்டார். இவருடைய உத்தரவுப்படி 'அவது' (அயோத்தியா) வை நிர்வகித்த ஆளுரான மீர்பக்கி ஒரு பள்ளிவாசலை கட்டினார்.இப்பள்ளிவாசல் பின்னர் பாபரிமஸ்ஜித் என்று அழைக்கப்ட்டது.இதுவே பாபரிமஸ்ஜிதின் வரலாறு. 
                   
                 முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் பல நூற்றண்டுகாலம் நல்லிணக்கத்துடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.அவகள் முஸ்லிம் மற்றும் ஹிந்து தலைவர்களின் தலைமையில் அணிவகுத்து நின்று வெள்ளையர்களுக்கு எதிராக 1857 இல் போராடியுள்ளனர்.  
                 
                 முஸ்லிம்-ஹிந்த் ஒற்றுமைதான் வெள்ளையர்கள் அவதில் ஆட்சி செய்ய மிகப்பெறிய தடையாக அமைந்தது.பிரிட்டிஷ் ஏஜெண்டான லார்ட் டஃப்ரின்(1884-1888) முஸ்லிம்களுக்கெதிராக ஹிந்துக்களை திசைதிருப்ப சதித்திட்டம் ஒன்றை தீட்டினர்.
                 
                 அவர் புத்த ஜோதிடர் ஒருவரின் உதவியுடன் பாபரிமஸ்ஜித் அமைந்த இடத்தில் தான் இராமர் பிரந்தார் சீதையின் சமயலறை அங்கு தான் இருந்தது என்றும் கதைகட்டி விட்டார்.
                                               
                 இப்பொய் பிரச்சாரத்தை ஹிந்துக்களில் ஒரு குற்றிப்பிட்ட பிரிவினரை சாதூர்யமாக நம்பவைத்து வழிகெடுத்ததில் வெள்ளைய நிர்வாகத்தினர் வெற்றி பெற்றுவிட்டனர்.அதனடிப்படையில்தான் மஹந்த் ரகுபிர் தாஸ் என்பவர் பைஸாபாத் துனை நீதிபதி பண்டிட் ஹரி கிஷன் முன்பு டிசம்பர் 12, 1885 அன்று ஒரு மனுதாக்கல் செய்கிறார்.

அதில் அவர்;
                                            "நான் ராமஜென்ம பூமியின் மஹந்த் (சாமியார்) பாபரிமஸ்ஜிதின் முன்பகுதியிலுள்ள நடைமேடைதான் ராமர் பிறந்த இடம்.இது திறந்த வெளி நடைமேடையாக இருப்பதால் பூஜை செய்ய அங்கு சில சங்கடங்கள் எங்களுக்கு இருக்கிறது.எனவே அங்கு அதன்மீது ஒரு கோவிலை கட்ட வேண்டும்.ஆனால் அரசாங்கம் எனக்கு அனுமதியளிக்காமல் தடுக்க வருகிறது"என்று கூறினார்.                                         
                     
                பள்ளிவாசல் அருகே கோவில் கட்டப்படுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
                     
                இந்த தருணத்தில் கோவில் கட்ட அனுமதி கொடுப்பது என்பது கலவரங்களுக்கும்,படுகொலைகளுக்கும்,அடித்தளம் அமைப்பது போன்றாகிவிடும் என்று நீதிமன்றம் கருதுகிறது.நீதியின் பார்வையில் ஹிந்துக்களும்-முஸ்லிம்களும் அவை இரண்டு வெவ்வேறு மதமாக இருப்பதால் அவர் கேட்பதை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது.
                                                                                     
               இந்த நீதிமன்ற தீர்ப்பு மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் பாபரிமஸ்ஜித் அந்த இடத்தில் அமைந்திருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.அந்தனிலம் தொடர்பாக ஹிந்துக்களுக்கும் ஆட்சேபணை ஒன்றும் இல்லை என்பதுதான்.மஸ்ஜிதும் நடைமேடையும் ஒரு சுவரின் மூலம் பிரிக்கப்பட்டிருந்தது.இது பண்டிட் ஹரிகிஷன் அவர்களின் தீர்பிலேயே உள்ளது.
                                        
                                      1885 ம் ஆண்டு துனை நீதிபதி பண்டிட் ஹரிகிஷன் தந்த தீர்ப்பில்;
                   
                                    "பள்ளிவாசலுக்கும் சபுத்திராவிற்கும் (நடைமேடை) இடையே ஒரு சுவர் இருக்கின்றது என்பது பார்வைக்கு வைக்கப்பட்ட சரியான வரைபடத்தின் மூலம் தெளிவாகிறது.அங்கு பள்ளிவாசலுக்கும் சபுத்திராவிற்கும் இடையில் தெளிவாக பிர்க்கப்பட்ட வரயறுக்கப்பட்ட எல்லை உள்ள்து" என்றார்.
                  
                                    'அவது'டைய (அயோத்தியின்) நீதிமன்ற ஆணையாளர் அல்லது ஜூடிசியல் கமிக்ஷனர் மற்றும் மாவட்ட நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கலோனல் ஜே.ஈ.ஏ.சேம்பர் அவர்கள் மார்ச், 26, 1886ல் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மஹந்த் ரகுபிர் தாஸின் கோரிக்கையை நிராகரித்தார்.
             
            பின்னர் இதே கோரிக்கை ஜுடிசியல் கமிக்ஷனர் ஏ.டபிள்யு யங்க் ஆல் நவம்பர் 1,1886 அன்று நிராகரிக்கப்பட்டது. இதுதான் சபுத்திரா அல்லது நடைமேடையின்மீது கோவில் கட்ட வேண்டிய பிரச்சனையில் நீதிமன்ற விசாரணையின் இறுதி முடிவாகும். அதன் மூலம் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.
            
           அந்த நேரத்தில் ஹிந்துக்களின் கோரிக்கை பாபரி மஸ்ஜித் அல்ல.மாறாக மஸ்ஜிதுடையே முன்பகுதியில் அமைந்திருக்கும் சபுத்திரா என்ற நடல்மேடைதான் என்பதை கவனத்தில் கொல்ல வேண்டும்.
           
         அதுவும் பள்ளிவாசலுக்கு அருகில் நடைமேடையில் கொவில் கட்டப்படும் கோரிக்கை தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள்து.இவ்வாறாக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் சபுத்திராவில் ஹிந்துக்கள் பூஜை செய்வதும் 1949 வரை தொடர்ந்தது.
    
        அயூத்தியா வாழ் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நில விவந்த ஒற்றுமை உணர்வை குலைக்க வெள்ளை ஏகாபத்தியம் தொடர்ந்து தந்திரம் செய்தது.
                       
        அதாவது ராமர் பிறந்த இடத்தின் மீது அமைந்திருந்த கோவிலை இடித்துவிட்டுத் தான் பாபர் பள்ளிவாசல் கட்டினார் என்பதாக பொய்யான செய்திகளை பரப்ப ஆரம்பித்தனர்.
       
        பிரிட்டிஷ் அதிகாரி ஹெச்.ஆர்.நெவில் என்பவர் 1905ல் இந்த பொய் பிரசாரத்தையே விரிவாக இப்படி கூறினார்;1528ல் பாபர் அயோத்தியா வந்து ஒரு வாரம் தங்கியிருந்தார்.பழங்கால கோவிலை இடித்தார்,அதன் மீது பாபர்மஸ்ஜித் என்று அழைக்கப்படும் பள்ளிவாசலை கட்டினார்''(ஃபைஸாபாத் கெசட்;பக்கம் 173)இது வேண்டுமென்றே திட்டமிட்டு புனையப்பட்ட கதையாகும்;பள்ளிவாசலின் மீது எழுப்பப்பட்ட சர்ச்சை இதன் மூலம் வலுவடைந்தது.
                      
       ஆனால் பாபரி மஸ்ஜித் நிலத்தின் மீது கோவில் இருந்ததுக்கான எழுத்துப்பூர்வமான மற்றும் தொல்லியல் பழங்கால பொருள் போன்ற எந்த வித மூல ஆதாரம் எதுவுமே இன்றுவரை இல்லை.பின்பு 1934ல் சுதந்திரத்திற்கு முன்பு அயோத்தியாவில்  வகுப்பு கலவரம் ஒன்று நிகழ்ந்தது.அந்த கலவரம் பாபரி மஸ்ஜித் தொடர்பாக நடந்தது அல்ல.மாறாக ஒரு மாடறுப்பு சம்பவம் தொடர்பாகத்தான் நடைபெற்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் தகவல் பெற (click this)

இருதி வரை நீ போராடு


                                                       ஆண்மை                                                                                                                   


காணும் கனவுகள் உன்னை என்றும்
கட்டு படுத்திடல் ஆகாதே!
அழகிய சிந்தனை நல்லதுதான்,
இருதி வரை நீ போராடு
ஆனால் கொள்கை அது அல்ல்;
வெற்றியும்,தோல்வியும் வேடங்கள்தான்
இரண்டையும் ஒன்றாய்க் கருதிடுவாய்;

இதயமும்,நரம்பும் இற்றிடினும்
இறுதியை தொடும் வரை போராடு;
உன்னில் எல்லாம் உதிர்ந்தாலும்
உறுதியுடன் நீ போராடு;
நெஞ்சில் உறுதி இருக்கும் வரை
நெகிழ விடாதே,போராடு;

எட்டும் தூரம் மணித்துளிதான்
எழுந்திடு,ஒரு போராடு;
பூமியும் அதனுள் ஒவ்வொன்றும்
எல்லாம் முயன்றால் உனக்குதான்;
இப்படி இருந்தால் என் மகனே!
பூமியில் நீ தான் ஆண்மகனே. . . . . . . . . . .!